ஜூன் 14ந்தேதி 1200 தியேட்டர்களில் வெளியாகும் கேம்ஓவர்!

ஆடுகளம் டாப்சி நடிப்பில் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள படம் கேம்ஓவர். அஸ்வின் சரவணன் இயக்கியுள்ள இந்த படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாரித்துள்ளது. இப்படம் ஜூன் 14ந்தேதி வெளியாகிறது.

மேலும், ஹிந்தியில் டாப்சிக்கு பெரிய மார்க்கெட் இருப்பதால் இந்த கேம் ஓவர் படத்தை ஹிந்தியிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள். அந்த வகையில் இப்படம் மூன்று மொழிகளிலும் சேர்த்து 1200 தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

Comments