13 வயது டீனேஜருக்கு ரஜினி கூறும் அறிவுரை இதுதான்! - வீடியோ

தர்பார் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் மகன் அப்புவின் பிறந்தநாளுக்கு ரஜினிகாந்த் பேசிய வாழ்த்து வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் தனக்கே உரிய ஸ்டைலில் 13 வயது பையனுக்கு வாழ்த்துக் கூறுகிறார் சூப்பர்ஸ்டார்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது மும்பையில் தர்பார் ஷூட்டிங்கில் இருக்கிறார்.
 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் 167வது படமாக வெளியாகவிருக்கிறது. இந்தப்படத்தில் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நயன் தாரா நடிக்கிறார். இந்தப்படத்துக்கு பேட்ட படத்துக்கு இசையமைத்த அனிருத் மீண்டும் இசையமைக்கிறார். இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான பேட்ட படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்தப்படமும் வரும் 2020 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவிருக்கிறது. லைக்கா தயாரிக்கும் இந்தப்படத்துக்கு தளபதி படத்தின் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். 
 
சந்தோஷ் சிவன் ரஜினிகாந்த் நடிப்பில் மாஸ் ஹிட் அடித்து வரலாறு படைத்த தளபதி படத்தின் ஒளிப்பதிவாளர். அதன்பிறகும் ரோஜா, இந்திரா, இருவர், உயிரே, ராவணன் என பல மணிரத்னம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர் தெலுங்கு, பாலிவுட் படங்களில் பிசியாகிவிட்டார். இவர் ஐந்து தேசிய விருதுகளைப் பேற்றவர்.மேலும் பத்பஸ்ரீ பட்டம் வாங்கியவர். கடைசியாக செக்கச் சிவந்த வானம் படத்துக்குதான் தமிழில் ஒளிப்பதிவு செய்திருந்தார். இவர் சமீபத்தில் சௌதர்யா ரஜினியின் மகனுடன் ரஜினிகாந்தை வைத்து எடுத்த புகைப்படம் மிகவும் வைரல் ஆனது. நேற்று அவரது மகன் அப்புவுக்கு 13-வது பிறந்தநாள். இதற்காக ரஜினிகாந்த் அப்புவுக்கு ஆங்கிலத்தில் வாழ்த்து சொல்லி வீடியோ ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த வீடியோதான் தற்போது வைரல் ஆகி வருகிறது.
  

Comments