96 படம் கேரளாவில் வெளியானதிலிருந்து விஜய்சேதுபதிக்கு என ஒரு ரசிகர் வட்டமும் வியாபார மார்க்கெட்டும் உருவாகிவிட்டது. இந்த நிலையில் தமிழில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஜய்சேதுபதியை, முதன்முதலாக மார்க்கோனி மத்தாய் என்கிற படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அழைத்து வந்துள்ளார் இயக்குனர் சனில் கலத்தில். இவரை மலையாளத்திற்கு அழைத்து வந்ததில் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கும் ஜெயராமின் பங்கும் உண்டு.
ஆனாலும் இந்த படத்தில் தனியான கதாபாத்திரம் என எதுவும் இல்லாமல் நடிகர் விஜய்சேதுபதி ஆகவே நடிக்கிறார் விஜய்சேதுபதி. அது மட்டுமல்ல இந்தப்படத்தில் ஒரு ரேடியோவும் மிக முக்கிய கதாபாத்திரமாக இடம்பெறுகிறது. இந்த படத்தில் டீஸர் வெளியாகி உள்ளது. வரும் ஜூலை 11ம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என்பதையும் ஜெயராமும், விஜய்சேதுபதியும் இணைந்தே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

Comments
Post a Comment