சிங்கம்-3 படத்திற்கு பிறகு ஸ்ருதிஹாசன் நடித்த சபாஷ் நாயுடு படம்
என்னவானது என்றே தெரியவில்லை. அந்த சமயத்தில் அவர் கமிட்டாகி வெளியேறிய
சங்கமித்ரா படத்தை ஆரம்பிக்காமலேயே நிறுத்தி விட்டார்கள்.இப்படியான
நிலையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த படத்திலும் நடிக்காத ஸ்ருதி, தனது
இத்தாலி காதலருடன் ஜாலி டூர் அடித்து வந்தவர் இசை ஆல்பங்களும் வெளியிட்டு
வந்தார்.
இந்நிலையில் தற்போது தமிழில் விஜயசேதுபதியுடன் லாபம்,
இந்தியில் பவர் போன்ற படங்களில் நடிக்கும் ஸ்ருதிஹாசன், அடுத்தபடியாக
தெலுங்கில் ஒரு படத்தில் கமிட்டாகியிருப்பதாக தெரிவித்துள்ளார்.
அந்த
வகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பவன்கல்யாணுடன் கட்டமராயடு என்ற
படத்தில் நடித்த ஸ்ருதிஹாசன், தற்போது ஒரு முன்னணி தெலுங்கு நடிகரின்
படத்தில் ஒப்பந்தமாகியிருப்பதாகவும், விரைவில் அதுபற்றிய தகவலை அந்நிறுவனமே
வெளியிடுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment