96 படத்திற்கு பிறகு நடிகை திரிஷா 5-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி பரமபதம் விளையாட்டு, படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்நிலையில் எங்கேயும் எப்போதும் படத்தை இயக்கிய சரவணன் இயக்கும் ராங்கி படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கதை, திரைக்கதையை ஏ.ஆர்.முருகதாஸ் எழுதி உள்ளார்.
பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் திரிஷா நடிக்கிறார்.இந்த படத்தின் முக்கிய காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழு உஸ்பெகிஸ்தான் சென்றுள்ளது. அங்கு ரிஸ்கான காட்சிகளை திரிஷா அசால்டாக நடித்துள்ளார்.கமர்ஷியல் ஆக்ஷன் படமாக உருவாகி வரும் ராங்கி படத்திற்கு முன்பாக சிம்ரனுடன் இணைந்து அட்வெஞ்சர் படத்தில் திரிஷா நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment