STR-ன் மாநாடு படப்பிடிப்பு துவங்கியது.... வெங்கட் பிரபு அறிவிப்பு!

மே மாதம் மாநாடு பட படப்பிடிப்பு தொடங்கும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்!!
சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இந்தப் படத்துக்குப் பிறகு ‘மாநாடு’ படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை, வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன், எடிட்டராக பிரவீன் கே.எல் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். படத்தின் டைட்டில் போஸ்டர் கடந்த ஆண்டு ஜுலை மாதம் வெளியானது.
இந்தப் படத்துக்காக இங்கிலாந்து சென்ற சிம்பு, அங்கு உடல் எடை குறைப்புக்கான சிகிச்சை எடுத்து திரும்பியுள்ளார். தற்போது அவர் சிகிச்சைக்குப்பின், தம்பி குறளரசன் திருமணத்தில் கலந்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நெருங்கிய நண்பர்கள் மட்டுமே அழைக்கப்பட்ட திருமண வரவேற்பு நிகழ்வில் இயக்குநர் வெங்கட்பிரபுவும் பிரேம் ஜி அமரனும் கலந்து கொண்டனர். சிம்புவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு, மே மாதம் முதல் மாநாடு ஷூட்டிங் தொடங்கும் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Comments