நடிகர் சூர்யா, நேற்றைய தினம் ட்விட்டர் நேரலையில் வந்து அனைத்து ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சற்றும் தயக்கம் இன்றி, இவர் பதில் அளித்த விதம் அனைவரையும் கவர்ந்தது.இந்நிலையில், இதே நேரலையில்…சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்
முன்னணி வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவும், சூர்யாவிடம் ட்விட்டர் நேரலையில் ஒரு கேள்வியை எழுப்பினார்.அதாவது, CSK அணியில் உள்ள எந்த வீரரை உங்களுக்கு பிடிக்கும் என்பது தான் அந்த கேள்வி. இதற்கு சற்றும் யோசிக்காமல், சூர்யா தல தோனியின் பெயரை கூறினார். மேலும் CSK அணி என்றாலே தனக்கு மிகவும் பிடித்தவர் தோனி தான் என்றும், CSK அணியின் ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்துள்ளேன் என்றும் கூறி இருந்தார்.சூர்யாவின் இந்த பதிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் டுவிட்டர் பக்கதில் ‘ஒன்றரை டன் வெயிட்டுடா’ என்று கமெண்ட் அளிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment