ஜெயம் ரவியின் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தம்!

இயக்குநர் லட்சுமனன்,ஜெயம் ரவி மூன்றாவது முறையாக இணையும் புதிய படத்தில் ஹன்சிகாவுக்கு பதிலாக நித்தி அகர்வால் நாயகியாக ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. ரோமியோ ஜூலியட், போகன் படங்களை தொடர்ந்து லட்சுமணன் ஜெயம் ரவி மீண்டும் இணைந்துள்ளனர். முந்தைய 2

படங்களிலுமே ஜெயம் ரவி ஜோடியாக ஹன்சிகா நடித்திருந்தார். ஆனால், இந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நித்தி அகர்வால் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக படக்குழு டாப்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இருவரும் நடிக்கிறார்களா என்பது இன்னமும் உறுதியாகவில்லை.ஜெயம் ரவியின் 25-வது படமாக உருவாகும்
 
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். ஜெயம் ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமார் தனது ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். இவர் இதற்கு முன்பாக ஜெயம் ரவியின் அடங்கமறு படத்தை தயாரித்திருந்தார். இந்தப் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Comments