எனக்கும் காலம் வரும் : விஷால் ஆவேசம்!

லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால் நடித்துள்ள அயோக்யா‘ திரைப்படம் நேற்றுரிலீசாக இருந்த நிலையில் தயாரிப்பாளரின் நிதி பிரச்சனையால் இப்படம் இன்று வெளியாகவில்லை.இதையடுத்து, படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. விரைவில் ரிலீஸ் செய்வதற்கான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அயோக்யா படத்திற்காக நான் கடினமாக உழைத்து உள்ளேன். ஒரு நடிகர் என்பதையும் தாண்டி, இந்தப்படத்தில் எனது பங்களிப்பு அதிகம். எனக்கும் ஒரு காலம் வரும்.. எனது பயணம் தொடரும்‘ என்று நடிகர் விஷால் கூறியுள்ளார்.

Comments