சூர்யாவும் ஆர்யாவும் இணைந்து நடித்த 'காப்பான்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் ஆர்யாவின் படம் ஒன்றுக்கு சூர்யா இன்று தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆர்யா நடிப்பில் 'மெளனகுரு' இயக்குனர் சாந்தகுமார் இயக்கிய 'மகாமுனி' திரைப்படத்தின் டிரைலர் இன்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஆர்யாவின் வித்தியாசமான தோற்றம் மற்றும் நடிப்பிற்கு பாசிட்டிவ் கமெண்ட்டுக்கள்
பதிவாகி வருகிறது. ஆர்யா, மஹிமா நம்பியார், இந்துஜா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைத்துள்ளார். ஸ்டுடியோக்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.இந்த நிலையில் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் 'மகாமுனி' திரைப்படத்தின் டிரைலர் மிகவும் நன்றாக இருந்ததாகவும் ஆர்யாவுக்கு தனது வாழ்த்துக்கள் என்றும் சூர்யா தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment