தனியார் அமைப்பு ஒன்று நடத்திய 'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள்' பட்டியலில் தல அஜித் மற்றும் தல தோனி ஆகிய இருவரது பெயர்களும் மிஸ் ஆகியுள்ளதுஇந்தியாவின் புகழ் பெற்ற ஒரு தனியார் அமைப்பு 'நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் 2019' என்ற பட்டியலை தயார் செய்தது. திரைத்துறையை பொருத்தவரை இந்த பட்டியலில் அகில இந்திய அளவில் முதல் ஐந்து இடங்களில் அமிதாப்பச்சன்,
அமீர்கான், சல்மான்கான், அக்சய்குமார் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் உள்ளனர்.
அதேபோல் தென்னிந்திய திரையுலகினர் பட்டியலில் ரஜினிகாந்த், விஜய், விக்ரம் ஆகியோர் முதல்
மூன்று இடங்களில் உள்ளனர். இந்த பட்டியலில் தெலுங்கு, கன்னடம், மலையாள நட்சத்திரங்கள் இடம்பெறவில்லை என்பது ஆச்சரியமளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.அதேபோல் அகில இந்திய அளவில் நம்பகத்தன்மையுள்ள நடிகைகள் பட்டியலில் தீபிகா படுகோனே, காத்ரினா கைப், மாதுரி தீக்சித், அலியா பட், கஜோல் ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர். ஐஸ்வர்யாராய் 6வது இடத்திலும் சன்னிலியோன் 11வது இடத்திலும் உள்ளர்.
இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களில் விராத் கோஹ்லி, சச்சின் தெண்டுல்கர், ரோஹித் சர்மா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர். திரையுலகினர் பட்டியலில் தல அஜித்தும் கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் தல தோனியும் இடம்பெறாதது அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது
Comments
Post a Comment