ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து 2011ல் திரைக்கு வந்து வசூலை அள்ளிய படம் காஞ்சனா. இதில் சரத்குமார், லட்சுமிராய், கோவை சரளா, தேவதர்ஷினி உள்பட மேலும் பலர் நடித்து இருந்தனர். தற்போது இந்த படம் இந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற பெயரில் ரீமேக் ஆகிறது. அக்ஷய்குமார் நாயகனாகவும் கியாரா அத்வானி நாயகியாகவும் நடிக்கின்றனர். லாரன்சே இயக்கினார்.
இதன் படப்பிடிப்பு மும்பையில் சில நாட்களாக நடந்து வந்த நிலையில் படத்தின் முதல் தோற்றத்தை
அக்ஷய்குமார் தனது வலைத்தளத்தில் வெளியிட்டார்.இது லாரன்சுக்கு தெரியாதும் அவரிடம் ஆலோசிக்காமல் வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து காஞ்சனா இந்தி படத்தில் இருந்து விலகுவதாக லாரன்ஸ் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் லாரன்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில். ‘மதியாதார் வாசலை மிதியாதே என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. இந்த உலகத்தில் பணம், புகழை தாண்டி மரியாதை முக்கியம். அதனால் ‘லட்சுமி பாம்’ படத்தில் இருந்து விலகுகிறேன்.
படத்தின் இயக்குனரான எனக்கு தெரியாமல் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். இதை அவமரியாதையாக கருதுகிறேன். படத்துக்காக நான் எந்த ஒப்பந்தமும் போடவில்லை.அக்ஷய்குமார் மீது எனக்கு மரியாதை உள்ளது. அவர்கள் வேறு இயக்குனரை வைத்து படத்தை எடுத்துக்கொள்ளலாம்’ என்று கூறியுள்ளார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Comments
Post a Comment