சசிக்குமார், நிக்கி கல்ராணி இணையும் படம் ராஜவம்சம்’!

சசிகுமார் நடித்து வரும் படங்கள் ‘நாடோடிகள்-2’, ‘கொம்பு வச்ச சிங்கமடா’, ‘கென்னடி கிளப்’ ஆகியவை! இந்த படங்கள் தவிர ‘ராஜவம்சம்’ என்று பெயரிடப்பட்டுள்ள படத்திலும் நடிக்கிறார் சசிக்குமார். இந்த படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். இவர்களுடன்

ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், சதீஷ், ரமேஷ் கண்ணா, யோகி பாபு, சிங்கம் புலி, மனோபாலா உட்பட 49 பேர் நடிக்கிறார்கள். இந்த படத்தை அறிமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் சுந்தர்.சி.யிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அனுபவம் பெற்றவர்!

இந்த படம் நாட்டுக்கு தேவையான நல்ல ஒரு கருத்தை கூறும் படமாக உருவாகி வருகிறதாம். ‘செந்தூர் ஃபிலிம்ஸ்’ சார்பில் டி.டி.ராஜா தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைக்கிறார். சித்தார்த் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பொள்ளாச்சி, பாங்காங் ஆகிய இடங்களில் நடந்துள்ளது.

Comments