ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள கொலைகாரன்’ ரிலீஸ் தேதியை வித்தியாசமாக அறிவித்த படக்குழுவினர்!

விஜய் ஆண்டனி, அர்ஜுன், ஆஷிமா நார்வல் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கொலைகாரன்’. ஆக்‌ஷன் கலந்த த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இந்த படத்தை ஆண்ட்ரூஸ் லூயிஸ் இயக்கியுள்ளார். மே மாதம் ஏராளமான திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வரும் நிலையில் இந்த படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என்ற கேள்வியை படக்குழுவினர்
சில நாட்களுக்கு முன் ரசிகர்களிடம் வைத்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை இப்போது படக்குழுவினர் வித்தியாசமாக ஒரு வீடியோ வடிவில் அறிவித்துள்ளனர். அந்த வீடியோவில் முதலில் ரிலீஸ் தேதி மே-17 என்று அறிவிக்கபப்ட்டது. பிறகு மே 10, 24 என்று பலவேறு தேதிகளை குறிப்பிட்டு குழப்பத்தை தரும் விதமாக பல தேதிகள் வெளியாக, இறுதியில் ஜூன் 5-ஆம் தேதி ‘கொலைகாரன்’ வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

Comments