இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘மெரினா’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ ஆகிய படங்களில் நடித்திருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்போது இருவரும் மூன்றாவது முறையாக இணைகிறார்கள்.சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் 11-வது படமான இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. எந்திரன், சர்கார், பேட்ட ஆகிய பிரமாண்ட படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்கும் நான்காவது படம் இது. இதன் மூலம் சன் பிக்ச்சர்ஸ் – சிவகார்த்திகேயன் கூட்டணி முதல் முறையாக இணைகிறார்கள்.
சிவகார்த்திகேயனின் 16-வது படமான இந்தப் படத்தில் இரண்டு முன்னணி கதாநாயகிகள் நடிக்கிறார்கள். ‘துப்பறிவாளன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை அனு இம்மானுவேல் முதல்முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேருகிறார். இது அவரது இரண்டாவது தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் சார்பில் தயாரித்த முதல் திரைப்படமான ‘கனா’ படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இந்த படத்தில் நடிக்கிறார் .
மேலும் இந்த படத்தில் பிரபல இயக்குநர்கள் மற்றும் நடிகர்களான பாரதிராஜா, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இவர்களுடன் நட்டி(எ) நடராஜ், R.K.சுரேஷ், காமெடி நடிகர்களான சூரி, யோகி பாபு மற்றும் வேல ராமமூர்த்தி, நாடோடிகள் கோபால், சுப்பு பஞ்சு, அர்ச்சனா, ரமா என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.
இயக்கம் – பாண்டிராஜ், தயாரிப்பு – சன் பிக்ச்சர்ஸ், இசை – D.இமான், ஒளிப்பதிவு – நிரவ் ஷா, கலை இயக்கம் -வீர சமர், படத் தொகுப்பு – ஆண்டனி எல்.ரூபன், மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மது.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் எளிமையாக தொடங்கியது.
Comments
Post a Comment