தல அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 'தல 60' என்று அழைக்கப்படும் இந்த படத்தையும் எச்.வினோத் இயக்கவுள்ளார்.
இந்த நிலையில் 'தல 60' படத்திற்காக அஜித்திடம் இயக்குனர் வினோத் இரண்டு கதைகளை கூறியுள்ளாராம். ஒன்று அரசியல் பின்னணி கொண்ட கதை. இன்னொன்று தற்போதைய சமுதாய பிரச்சனைக்கு தீர்வு அளிப்பது. இந்த இரண்டில் அரசியல் கதைக்கு நோ சொன்ன அஜித், சமுதாய பிரச்சனைக்கு தீர்வு சொல்லும் கதையை தேர்வு செய்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது
மேலும் இந்த படத்திற்காக அஜித் தனது உடல் எடையை குறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார். கடந்த நான்கு படங்களில் உடல் எடையுடன் கூடிய அஜித்தை பார்த்த ரசிகர்களுக்கு இந்த படத்தில் ஸ்லிம் அஜித்தை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பரில் தொடங்கும் என்றும் இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது..
அந்த புதிய படத்திற்காக வினோத் அஜித்திடம் இரண்டு கதைகளைச் சொன்னாராம். அதில் ஒரு கதை அரசியல் கதை, மற்றொரு கதை சமூகப் பிரச்சினை கொண்ட கதையாம். அரசியல் கதையை வேண்டாமென்ற அஜித், சமூகப் பிரச்சினை பற்றிய கதையைப் படமாகப் பண்ணலாம் என்று சொன்னாராம். அந்தப் பிரச்னைக்கு படம் ஒரு தீர்வையும் சொல்லும் விதமாகத்தான் கதை அமைக்கப்பட்டுள்ளதாம். அதுவே அஜித்தைக் கவர்ந்த அம்சம் என்கிறார்கள். கதையை மேலும் மெ
ருகூட்டும் வேலைகள் நடந்து வருகிறதாம்.
Comments
Post a Comment