வாய்ப்புகளை வரவழைப்பதற்கான முயற்சியில் ஆடை நழுவவிடும் லாவண்யா திரிபாதி!

கொஞ்சம் பூசனாப்ள.. புஷ்டியா பிரம்மன் படத்தில் அறிமுகமான லாவண்யா திரிபாதி அதற்கு முன்பே தெலுங்கில் இரண்டு படங்களில் நடித்திருந்தார். புதுமுக மோகம் சில வருடங்கள் தொடர்ந்தாலும் கடந்த 2 வருடங்களாகவே அவரது மார்க்கெட் டல்லடிக்கத் தொடங்கியது. இதற்கிடையில் மாயவன் என்ற மற்றொரு தமிழ் படத்திலும் நடித்தார். படம் பேசப்பட்டாலும் லாவண்யாவுக்கு கைகொடுக்கவில்லை. இந்த ஆண்டில் ஒரு தெலுங்கு படம் மட்டுமே நடிக்கிறார்.

அந்த படமும் இந்த பிரச்னை அந்த பிரச்னை என்று ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. இதனால் லாவண்யாவை யாரும் கண்டுகொள்வதாக இல்லை. கிளாமராக நடிப்பதில்லை என்ற முடிவோடு வாய்ப்புகளை ஏற்று வந்தவர் நடிப்பில் பெரிதாக சோபிக்கவில்லை. அதனால் சீக்கிரமே பட வாய்ப்புகள் குறைந்தன. நடிப்பு வராவிட்டாலும் கிளாமர் காட்டி நடித்தால் நடிப்பு பற்றி யாரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என பலரும் லாவண்யாவிடம் கிசுகிசுத்தனர். அதில் உள்ள உண்மையை அடுத்தடுத்த பட தோல்வியால் லேட்டாக புரிந்துகொண்டார்.

இதையே சாக்காக வைத்து தன்னை ஓரம்கட்டிவிடக்கூடாது என்று பயந்தவர் இனி வாய்ப்புகளை வரவழைப்பதற்கான முயற்சியில் இறங்க முடிவு செய்தார். திடீரென தன்னுடைய கவர்ச்சி படங்களை நெட்டில் பகிரத் தொடங்கியிருக்கிறார். பட்டாடையை மேலும், கீழும் நழுவவிட்டு பளீர் கவர்ச்சியில் அவர் பதிவிட்டுள்ள படங்கள் இயக்குனர்களின் பார்வையை தன் பக்கம் ஈர்க்கும் என கணக்குபோட்டிருக்கிறார். லாவண்யாவின் டெக்னிக் ஒர்க் அவுட் ஆகுமா என்பது போக போக தெரியும்.

Comments