கனா’ படத்தை தொடந்து தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் தும்பாவின் சென்சார் ரிசல்ட்டும், ரிலீஸ் தேதியும்!

கனா’ படத்தை தொடந்து தர்ஷன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘தும்பா’. இந்த படத்தில் தர்ஷனுக்கு ஜோடியாக நடிகரும், தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடிக்கிறார். இயக்குனர் துரை செந்தில் குமாரின் உதவியாளர் ஹரீஷ் ராம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத், விவேக் - மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இசை அமைக்கிறார்கள்.
முழுக்க முழுக்க ஃபேண்டசி ரக படமாக உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி நிறைவடைந்தது. அதனை தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் முடிவடைந்து இப்போது படத்தின் சென்சார் காட்சியும் நடைபெற்றது. ‘தும்பா’விற்கு சென்சாரில் ‘U’ சர்டிஃபிக்கெட் கிடைத்துள்ளதை தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் குறித்து விட்டார்கள்.
 
 இந்த படத்தின் விநியோக உரிமையை ‘கோட்டபடி’ ராஜேஷின் ‘KJR Studio’s நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் இப்படம் இம்மாதம் (மே) 17-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதே தினம் ‘பொட்டென்ஷிய்ல் ஸ்டூடியோஸ்’ நிறுவனத்தின் தயாரிப்பாக உருவாகியுள்ள ‘மான்ஸ்டர்’ படமும் வெளியாக இருக்கிறது.

Comments