தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வரும் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள பிரெஞ்சு -ஆங்கில படம் ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’. இந்த படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. ஹாலிவுட் இயக்குனர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த
படம் ஜக் வார்ட்ரோபின், ‘தி எக்ஸ்டார்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட காமெடி படமாகும். இந்
த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்த படம் கடந்த ஆண்டு பிரான்சில் வெளியானது. இதனை தொடர்ந்து ‘பக்கிரி’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படம் ஜூன் 21-ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை சஷிகாந்தின் ‘ஒய்நாட் எக்ஸ் நிறுவனம்’ வெளியிடுகிறது. அமித் திரிவேதி இசை அமைத்துள்ள இந்த படத்திற்கு மதன் கார்கி பாடல்களை எழுதியுள்ளார். நிகோலாஸ் எறேரா பின்னணி இசை அமைத்துள்ளார்.

Comments
Post a Comment