ஆடுகளம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி, தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த டாப்ஸிக்கு காஞ்சனா-2 படம் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து பிசியான நடிகையாக மாறினார்.இந்தியில் அமித்தாப்புடன் இணைந்து டாப்ஸி நடித்த பிங் படம் மிகப்பெரிய வெற்றி
பெற்றது, அந்த படம் தான் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. போனி கபூர் தயாரிக்க அஜித் நடிக்கிறார். டாப்ஸி கேரக்டரில் வித்யாபாலன் நடித்துள்ளார்.இந்நிலையில் நயன்தாராவை வைத்து மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்து டாப்ஸியை வைத்து கேம் ஓவர் என்ற படத்தை இயக்கி உள்ளார். தமிழ், தெலுகு, இந்தி என 3 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் ஜூன் 14-ம் தேதி வெளியாகிறது.இதில் வீல் சேரில் அமர்ந்திருக்கும் வித்தியாசமான கேரக்டரில் டாப்ஸி நடித்துள்ளார்.
Comments
Post a Comment