டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா, ஷாலினி பாண்டே, ராதாரவி, சதீஷ் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கும் படம் ‘கொரில்லா’. ‘ஆல் இன் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் விஜய் ராகவேந்திரா தயாரிக்கும் இந்த படத்தில் ஒரு சிம்பன்ஸி குரங்கும் நடித்துள்ளது. சாம் சி.எஸ்.இசை அமைக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபலங்கள் சிலரின் பேச்சு விவரம் வருமாறு..
இயக்குநர் ராஜேஷ் செல்வா – இந்தப் படத்தில் சம்பந்தப்பட்டவர்கள் என் படத்திலும் வொர்க் பண்ணி இருக்கிறார்கள். அதனால் இந்தப் படத்தைப் பற்றி எனக்குத் தெரியும். மிக நன்றாக வந்திருக்கிறது ‘கொரில்லா’.இயக்குநர் கண்ணன் - ஒரு அனிமலை வைத்து படமெடுப்பது பெரிய கஷ்டம். அதைச் சிறப்பாகச் செய்திருப்பதற்கு பெரிய வாழ்த்துகள். நிச்சயம் ‘கொரில்லா’ பெரிய வெற்றிப் படமாக அமையும்!
ராதாரவி - இந்த படத்தை ஒரு சிம்பன்ஸி குரங்கை வைத்து மிக அழகாக எடுத்திருக்கிறார்கள். நான் சில காட்சிகளைப் பார்த்தேன். நன்றாக இருக்கிறது. எனக்கும் இந்த படத்தில் நல்ல ஒரு கேரக்டரை தந்திருக்கிறார்கள். படத்தில் ஒரு வசனம் எனக்குப் பிடிக்காமல் பேசி இருக்கிறேன் யோகிபாபு நெகட்டிவ் விஷயங்களை பாஸிட்டிவாக எடுத்துக் கொள்ளும் நடிகன். இந்தப்படத்தில் அவரையும் மிகச்சிறப்பாக பயன்படுத்தி இருக்கிறார்கள்.
ஆர்.பி செளத்ரி – இந்த படத்தின் டிரைலரை பார்த்தேன். ரொம்ப நல்லாருந்தது. இந்தப் படத்தின் தயாரிப்பாளர் பெரிய லக்கி. படத்தை இப்போதே விற்பனை செய்துவிட்டார். கண்டிப்பாக இந்தப்படம் பெரிய வெற்றிப்படமாக அமையும். பாடல்கள் விஷுவல்ஸ் இரண்டும் நன்றாக இருந்தது. ஜீவாவிற்கு இப்படம் திருப்புமுனையாக அமையும்.
இயக்குநர் ராஜு முருகன் – ஜீவாவுக்கு என்னோட ‘ஜிப்ஸி’ படத்தில் பெரிய டாஸ்க். அதையெல்லாம் எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு அதிகமாக செய்திருந்தார். ஜீவா மாதிரி ஒரு ஆர்டிஸ்ட் இல்லை என்றால் ‘ஜிப்ஸி’ எடுத்திருக்க முடியாது. ‘கொரில்லா’ படம் டோட்டல் கான்ட்ரஸ்ட். அதிலும் கலக்கி இருக்கிறார்.
Comments
Post a Comment