ப்ரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடார் படத்தில் தன்னுடன் நடித்த ரோஷன் அப்துல் ரவூஃபை காதலிப்பதாக வெளியான தகவல் குறித்து உண்மை தெரிய வந்துள்ளது.ஒரு அடார் லவ் படத்தில் ரோஷன் அப்துல் ரவூஃபை பார்த்து கண்ணடித்து ஒரே நாளில் இந்தியா முழுவதும் பிரபலமானவர் ப்ரியா பிரகாஷ் வாரியர்.
அந்த காட்சி பிரபலமானதே தவிர படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ப்ரியாவின் நடிப்பு அந்த படத்தின் இயக்குநருக்கே பிடிக்கவில்லை.கொண்டாடினார்களோ அவர்களே படத்தை பார்த்த பிறகு அவரை கண்டமேனிக்கு கலாய்த்தனர். இந்நிலையில் ப்ரியா வாரியர் ரோஷனை காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.இது குறித்து ப்ரியா பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
வதந்திகள் பற்றி நான் என்ன சொல்வது. அது குறித்து சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ரோஷன் என் நல்ல நண்பர். எங்களுக்கு இடையே நல்ல புரிதல் உள்ளது. அவ்வளவு தான்.அவருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன். அவர் சிறந்த நடிகர், நல்ல டான்ஸர். எங்களுக்கு இடையேயான நட்பால் சிறப்பாக நடிக்க முடியும். இந்த கூட்டணி விரைவில் மீண்டும் சேர்ந்து நடிக்கும் என்று எதிர்பார்க்கிறேன் என்றார்.
Comments
Post a Comment