சின்னத்திரையில் எளிதாக ஜெயித்தவர், சினிமாவில் ஜெயிக்க போராடிக் கொண்டிருக்கிறார்: கன்னிகா ரவி!

அக்மார்க்க தமிழ் பொண்ணு கன்னிகா ரவி. கள்ளக்குறிச்சிதான் சொந்த ஊர். சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி அதன் பிறகு பாலச்சந்தர் இயக்கிய சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார்.

சின்னத்திரையில் எளிதாக ஜெயித்தவர், சினிமாவில் ஜெயிக்க போராடிக் கொண்டிருக்கிறார். கெளுத்தி என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் அந்தப்படம் பாதியிலேயே நின்று விட்டது. அதன்பிறகு ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படமும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் சமீபத்தில் வெளிவந்த தேவராட்டம் படத்தில் மனம் நலம் பாதிக்கப்படும் பெண்ணாக நடித்திருந்தார். இந்த கேரக்டர் ஓரளவிற்கு அவரை அடையாளம் காட்டி இருக்கிறது. இது தவிர சமுத்திரகனியுடன் அடுத்த சாட்டை படத்திலும், பெயரிடப்படாத சசிகுமார் படத்திலும், இன்னொரு புதிய படத்திலும் நடிக்கிறார்.

Comments