சூர்யாவின் 'என்.ஜி.கே': முதல் நாள் டிக்கெட் விற்பனையில் புதிய சாதனை!

சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கிய 'என்.ஜி.கே'. திரைப்படம் இம்மாதம் 31ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர்ஹிட்டாகி பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருகின்றது. 
இந்த நிலையில் சென்னை சத்யம் திரையரங்க வளாகத்தின் இணையதளத்தில் இந்த படத்தின் முன்பதிவு தொடங்கியது. முன்பதிவு தொடங்கிய ஒருசில மணி நேரத்தில் முதல் நாள் காட்சிகளுக்குரிய அனைத்து டிக்கெட்டுக்களும் விற்றுத்தீர்ந்துவிட்டது. இதனால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பதும், ஓப்பனிங் வசூல் புதிய சாதனையை ஏற்படுத்தவுள்ளது என்பதும் உறுதியாகியுள்ளது.
 
யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, பாலாசிங், மன்சூர் அலிகான், சம்பத்ராஜ், சரத்குமார், ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

Comments