மே 10: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ படம் சென்சார் செய்யப்பட்டு ‘யு’ சான்று பெற்றுள்ளது.சீமராஜா படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் எம்.ராஜேஷ் இயக்கத்தில் காமெடி கலந்த காதல் கதையான மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். காமெடி கதாபாத்திரத்தில் ரோபோசங்கர், யோகிபாபு ஆகியோர் நடிக்
கின்றனர்.ஹிப்ஆப் தமிழா ஆதி இசையமைக்கும் இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.இப்படம் வரும் 17-ம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில், இப்படத்தை சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டு காட்டினர். படத்தை பார்த்த அதிகாரிகள் எந்த வெட்டுமின்றி ‘யு’சான்று வழங்கி உள்ளனர். காமெடி கலந்த காதல் கதையாக உருவாகி உள்ள ‘மிஸ்டர் லோக்கல்’ விடுமுறையை குறிவைத்து வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment