ராட்சசி’ ட்ரைலர் இன்று முதல்!

கௌதமராஜ் இயக்கத்தில் ஜோதிகா முக்கிய வேடத்தில் நடிக்கும் படம் ராட்சசி’. ட்ரீம் வாரியர் சார்பில் எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்த படத்தில் ஜோதிகா பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா, சத்யன் ஹரிஷ் பெரடி, கவிதா பாரதி
உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜூனில் வெளியாகயிருக்கும் இந்த படத்தின் ட்ரைலரை இன்று மாலை 4 மணிக்கு வெளியிடுகின்றனர்.

Comments