அஜீத்தின் அடுத்த பட இயக்குனர் யார்?

அஜீத்குமாரின் அடுத்த படத்தை இயக்கப் போவது யார் என்ற கேள்வியை விட தயாரிப்பு நிறுவனம் எது என்ற எதிர்பார்ப்பு தான் இப்போது கோலிவுட்டில் நிலவுகிறது.அஜீத் இப்போது போனிகபூர் தயாரிப்பில் நேர் கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார். இது ஒரு ரீமேக் படம். இந்தியில் அஜீத் நடிப்பதாக இருந்தால் 3 கதைகள் இருக்கிறது என்றும் அஜீத் சம்மதம் சொன்னால் இந்தி , தமிழில் மெகா

பட்ஜெட்டில் தயாரிக்க தான் தயாராக இருப்பதாக போனி கபூர் கூறியிருக்கிறார்.ஆனால் போனி கபூர் கருத்துக்கு அஜீத் எந்த பதிலும் சொல்லவில்லை.இதற்கிடையில் விஸ்வாசம் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜீத்குமாருடன் இணைந்து படம் தயாரிக்க தியாகராஜனின் சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனமும் விருப்பம் தெரிவித்து உள்ளது. ஆனால் அஜீத் இவர்களுக்கும் எந்த பதிலும் சொல்லாமல் வழக்கமான டிரேட் மார்க் சிரிப்பை உதிர்த்து விட்டு அமைதியாக இருக்கிறார்.

Comments