படத்தின் ஆடிஷனுக்கு சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் குறித்து தெரிவித்துள்ளார் நடிகை அதிதி ராவ் ஹைதரி.பாலிவுட்டில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ள அதிதி ராவ் ஹைதரி கோலிவுட்டிலும் கவனம் செலுத்தி வருகிறார். மணிரத்னத்தின் இயக்கத்தில் காற்று வெளியிடை, செக்கச் சிவந்த வானம் என்று இரண்டு படங்களில் நடித்துவிட்டார்.இந்நிலையில் அவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து டிவி நிகழ்ச்சியில் பேசியுள்ளார். அப்பொழுது அவர் கூறியதாவது,
தெரியாத நபருடன் எப்படி நெருங்குவது என்று யோசித்தேன். (அதிதி அருனோதய் சிங் பற்றி பேசியுள்ளார்). அப்பொழுது எனக்கு அவரை தெரியாது, அவர் ஹல்க் மாதிரி பெரிதாக இருந்தார். என்னடா நடக்குது இங்க என்பது போன்று இருந்தது. ஆனால் அந்த நபர் தன்மையாக நடந்து கொண்டார்.
மணிரத்னத்தின் பாம்பே படத்தில் மனிஷா கொய்ராலா வெள்ளை நிற உடையில் கண்ணாளனே என்று பாடியதை பார்த்து தான் நடிகையாக ஆசைப்பட்டேன் என்று நினைக்கிறேன். நான் திரைக்குள் புகுந்து மனிஷாவின் இடத்தில் இருக்க ஆசைப்பட்டேன்.
காற்று வெளியிடை படத்திற்காக மணிரத்னம் சார் என்னை லுக் டெஸ்ட்டிற்கு வருமாறு கூறினார். தமிழில் வசனம் இருந்ததால் எனக்கு பயமாக இருந்தது. அவரை சந்தித்து நான் இந்த வசனத்தை சொதப்பப் போகிறேன் என்றேன். அதற்கு அவரோ நீங்கள் எது வேண்டுமானாலும் பேசலாம், ஆங்கிலத்தில் கூட. ஆனால் இந்தியில் மட்டும் பேசாதீர்கள், எனக்கு புரியாது என்றார் என அதிதி தெரிவித்தார்.
Comments
Post a Comment