அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ், தர்ஷன் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘கனா’. பெண்கள் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து சிவகார்த்திகேயன் தயாரித்த இந்த படம் இப்போது ‘கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் தெலுங்கில் ரீ—மேக்காகி வருகிறது. தமிழில்
நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கிலும் அதே கேரக்டரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து ஐஸ்வர்யா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘என்னுடைய முதல் தெலுங்கு திரைப்படம் ‘கௌசல்யா கிருஷ்ணமூர்த்தி’. இது ‘கனா’ படத்தின் ரீ-மேக்! இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும். இந்த படத்தை பீமனேனி ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார்’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்தை இயக்கும் பீமனேனி ஸ்ரீனிவஸ் ஏற்கெனவே தமிழில் வெளியான ‘சூர்யவம்சம்’, ‘திருப்பாச்சி’, ‘தமிழ்படம்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ உட்பட பல படங்களை ரீ-மேக் செய்து இயக்கியவராவார்.
Comments
Post a Comment