வெங்கட் மோகன் இயக்கத்தில், விஷால், ராஷி கண்ணா, பார்த்திபன் கே.எஸ்.ரவிகுமார், வம்சி கிருஷ்ணா, சோனியா அகர்வல், ஆர்.ஜே.பாலாஜி ஆகியோர் நடிக்கும் படம் ‘அயோக்யா’. இந்த படம் வருகிற 10-ஆம் தேதி வெளியாகிறது. ‘லைட் ஹவுஸ் மூவீஸ்’ என்ற நிறுவனம் சார்பில் மது
தயாரித்துள்ள இந்த படத்திற்கு சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார். கார்த்திக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் மே 10-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படம் குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், ‘‘அயோக்யா’ படத்தின் அனைத்து வேலைகளையும் முடித்து விட்டேன். நன்றி! சில விஷயங்களில் சமூகத்தின் மீது இருக்கும் என்னுடைய கோபத்தை திரையில் காட்ட உதவியதற்கு நன்றி மோகன்!
இனிமே எவனாவது ஒரு பெண்ணை நாசம் பண்ணனும்னு நினைச்சா தூக்கு தண்டனைதானு பயப்படணும்’’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.விஷால் ட்விட்டரில் இப்படி பதிவிட்டுள்ளதை பார்க்கும்போது ‘அயோக்யா’ இப்போது சமூகத்தில் நடக்கும் அவலங்களை சுட்டிகாட்டும் படமாகவும், அப்படி அவலங்களை ஏற்படுத்துபவர்களுக்கு தக்க தண்டனை வழங்கும் படமாகவும் இருக்கும்’’ என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
Comments
Post a Comment