வைரமுத்து மீது 'மீடூ' குற்றச்சாட்டு, டப்பிங் யூனியனில் இருந்து வெளியேற்றம் பின் மீண்டும் நீதிமன்ற தீர்ப்பில் கிடைத்த வெற்றி என கடந்த சில மாதங்களாக பரபரப்பான செய்தியில் இருந்து வருபவர் பிரபல பின்னணி பாடகி சின்மயி. மேலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் பரபரப்புடன் இருப்பதும் இவரது வழக்கமான ஒன்று.
இந்த நிலையில் சின்மயி டுவிட்டர் பக்கத்தில் ஒரு ரசிகர் 'உங்களுடைய நியூட்' புகைப்படத்தை அனுப்புங்கள் என்று கோரிக்கை வைக்க அதற்கு சின்மயி 'நியூட்' என்ற மேக்கப் சாதன நிறுவனங்களின் தயாரிப்பு பொருட்களின் புகைப்படங்களை பதிவு செய்து இவையெல்லாம் என்னுடைய ஃபேவரைட் நியூட் என்று பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த கேள்வியை சின்மயிடம் கேட்ட அந்த ரசிகர் தன்னுடைய அனைத்து பதிவுகளையும் டெலிட் செய்துவிட்டு தன்னுடைய டுவிட்டர் டிபி பெயரையும் மாற்றிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment