தல அஜித் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடி வரும் நிலையில் நேற்று அதிகாலை சரியாக 12.00 மணி தொடங்கியதில் இருந்தே அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டுவிட்டரில் மட்டும் அஜித் பிறந்த நாள் குறித்த நான்கு ஹேஷ்டேக்குகள் டிரெண்டில் உள்ளது. அந்த அளவுக்கு அஜித் ரசிகர்கள் 'தல' பிறந்த நாள் விழாவை தெறிக்க வைத்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அஜித் நடித்து முடித்துள்ள 'நேர்கொண்ட பார்வை' படத்தின் தயாரிப்பாளரும், அஜித்தின் குடும்ப நண்பர்களில் ஒருவருமான போனிகபூர் அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். நேற்று போனிகபூர் பதிவு செய்த வாழ்த்து டுவிட்டில், 'தல அஜித்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்களையும் உங்கள் குடும்பத்தையும் கடவுள் எப்போதும் காப்பாற்றுவார். நல்ல உடல்நலத்துடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க எனது வாழ்த்துக்கள். இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் போனிகபூர் கடந்த 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் இரண்டே இரண்டு டுவீட்டுக்களைத்தான் பதிவு செய்துள்ளார். அதில் ஒன்று கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி அஜித்தை பாலிவுட்டுக்கு அழைத்து வருவேன் என்று பதிவு செய்த டுவீட்டும் இன்று அவருக்கு வாழ்த்து தெரிவித்த டுவீட்டும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment