நடிகர் தனுஷ் தற்போது வெற்றி மாறனின் ‘அசுரன்’ மற்றும் இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு படங்களும் இந்த ஆண்டு வெளிவரவுள்ளதுஇந்த நிலையில் தனுஷ் நடித்த ஆங்கில திரைப்படமான ‘The Extraordinary Journey Of The Fakir’ என்ற படம் உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சமீபத்தில் கூட இந்த படம் ஸ்பெயினில் ரிலீஸாகி ஸ்பெயின் ரசிகர்களை கவர்ந்ததாக செய்திகள் வெளிவந்ததுஇந்த படத்தின் தமிழ்ப்பதிப்பிற்கு முதலில் ‘வாழ்க்கையை தேடி நானும் போறேன்’ என்ற தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அந்த தலைப்பு மாற்றப்பட்டு சுருக்கமாக ‘பக்கிரி’ என்று வைக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த படம் வரும் ஜூன் 21ஆம் தமிழகம் முழுவதும் வெளியீடு ஆகவிருப்பதாகவும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி தனுஷ் ரசிகர்களைகுஷிப்படுத்தியுள்ளது.கென் ஸ்காட் இயக்கியுள்ள இந்த படம் ஒரு ஆங்கில நாவலை தழுவி உருவாக்கப்பட்டுள்ளது. தனுஷுடன் பெரினிக் பிஜோ, எரின் மொராரிட்டி, பர்கத் அப்டி உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
Comments
Post a Comment