தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா?

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் பல்லவி மலையாளத்தில் 2015ல் வெளிவந்த 'பிரேமம்' படம் மூலம் அறிமுகமாகி தென்னிந்தியத் திரையுலகில் பரபரப்பாகப் பேசப்பட்டவர். அடுத்து தெலுங்கில் அறிமுகமாகி அங்கு தன் முதல் படமான 'பிடா' படத்திலேயே வெற்றியைப் பதித்தார்.

தமிழில் கடந்த வருடம்தான் 'தியா' படம் மூலம் அறிமுகமானார். அறிமுகப்படமே அவருக்கு தோல்விப் படமாக அமைந்தது. அடுத்து தனுஷ் ஜோடியாக 'மாரி 2' படத்தில் நடித்தார். படம் வெற்றி பெறவில்லை என்றாலும் தன் நடிப்பின் மூலமும் 'ரௌடி பேபி' பாடல் மூலமும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தினார். இந்தப் பாடல் மட்டுமே யு டியூபில் 50 கோடி பார்வைகளைத் தொட உள்ளது.

சாய் பல்லவி அடுத்து நாயகியாக நடித்துள்ள 'என்ஜிகே' படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவின் மனைவியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். தன் முதலிரண்டு படங்களில் வெற்றியை ருசிக்காத சாய் பல்லவி இந்த 'என்ஜிகே' படத்திலாவது வெற்றியை ருசிப்பாரா என அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

Comments