சிம்புவை புரொபோஸ் செய்த பிரபல நடிகை! நோ சொன்ன சிம்பு யார் தெரியுமா?

இதுநாள்வரை சிம்பு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் அவர் திரும்பிய பக்கமெல்லாம் சர்ச்சைகள் வெடித்தாலும் அவரை வைத்து படம் எடுத்த இயக்குநர்கள் கோரஸாக சொல்லும் ஒரு விஷயம், “சிம்பு ஒரு அபாரமான நடிகர்.

அவர் மட்டும் நடிப்பில் கவனம் செலுத்த தொடங்கினால்.. நிச்சயம் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நாயகனாக வலம் வருவார்” என்பதுதான்.இதுநாள்வரை இதை கண்டும் காணாமலும் வந்த சிம்பு, தற்போது இதற்கு செவிசாய்த்திருப்பது போல் தெரிகிறது.
 
இனி ரசிகர்களுக்காக நல்ல படங்கள் கொடுப்பேன் என சிம்பு உறுதியளித்துள்ளார். அவர் தேர்வு செய்யும் படங்களும் அதை உறுதிப்படுத்துகிறது.இது ஒருபக்கம் இருக்க சிம்புவின் காதல் எபிஸோடுகளும் அனைவருக்கும் தெரிந்த கதைகள்தான். இதில் தெரியாத ஒரு தகவலும் தற்போது கிடைத்துள்ளது.
 
அதாவது பிக் பாஸ் புகழ் ஐஷ்வர்யா தத்தா அண்மையில் டிவிட்டரில் யார் மீதோ காதலில் விழுந்துவிட்டதாக சொல்லி இருந்தார்.அந்த யாரோ வேறு யாருமில்லையாம் சிம்புதானாம். ஆனால் சிம்பு இவருடைய காதலை ஏற்கவில்லை என்றும் தன்னுடைய பழைய காதலி ஹன்சிகாவைதான் அவர் காதலித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Comments