விக்ரம் நடித்து முடித்துள்ள 'கடாரம் கொண்டான்' திரைப்படம் விரைவில் வெளிவரவுள்ள நிலையில் அவர் தற்போது 'துருவ நட்சத்திரம்' மற்றும் 'மகாவீர் கர்ணா' ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படம் அதாவது விக்ரமின் 58வது படம் குறித்த அறிவிப்பு இன்று அறிவிக்கப்படவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இன்று வெளியாகும் இந்த அறிவிப்பில் 'விக்ரம் 58' படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் உள்பட முக்கிய விபரங்கள் இருக்கும் என்றும், இந்த விபரங்களை தெரிந்து கொள்ள விக்ரம் ரசிகர்கள் ஆவலுடன் இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம் ‘இமைக்கா நொடிகள்’. நயன்தாரா அதர்வா, அனுராக் காஷ்யாப் முதலானோர் நடித்த இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்க இருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை லலித்குமாரின் ‘7 ஸ்கிரீன் ஸ்டூடியோ’ நிறுவனனும் ‘VIACOM 18 STUDIOS’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது.
‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய இரண்டு படங்களின் மூலம் கவனம் பெற்ற அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க இருக்கிறது. பிரம்மாண்ட ஆக்ஷன், த்ரில்லர் படமாக உருவாக இருக்கும் இந்த படத்திற்கான கதாநாயகி மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Comments
Post a Comment