கர்ப்பமாக இருக்கும்போது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட எமி! வைரலாகும் புகைப்படம்!

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில், வெளியான மதராசபட்டினம் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். இந்த படங்களை தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களில் மட்டுமே நடித்து வந்தார்.இதுவரை விஜய் நடித்த 'தெறி' தனுஷுடன் 'தங்கமகன்' சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் 2 . 0 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கு தமிழ் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தாலும், ஹாலிவுட்டில் சூப்பர் கேர்ள் சீரிஸில்,  நடித்ததால் தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிக்க முடியவில்லை
இந்நிலையில் ஜனவரி 1 ஆம் தேதி, தன்னுடைய காதலருடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, இந்த உலகிலேயே மிகவும் சந்தோஷமான பெண் நான்தான் என குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து, ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.
 
எமி ஜாக்சன் லண்டனைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபரான ஜார்ஜ் என்பவரை காதலித்து வருகிறார். அடுத்த வருடம் இவர்களுக்கு திருமணம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், திடீரென தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் எமிக்கும் - ஜார்ஜுக்கும் நேற்று, லண்டனில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Comments