அடுத்த படத்திற்காக உடல் எடையை குறைத்து ஆளே மாறிய அஜித்.! வைரலாகும் புகைப்படம்!

விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட படத்தில் கொஞ்சம் எடையை கூட்டியிருந்த அஜித் தற்போது எடையை குறைத்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தல அஜித் தனது 59ஆவது படமான நேர்கொண்ட பார்வை படத்தில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். இப்படம் வரும் ஆக்ஸ்ட் 10ம் தேதி திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் வினோத் இப்படத்தை இயக்கியுள்ளார்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார்.பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான தல60 படத்தையும், இயக்குனர் வினோத் இயக்க உள்ளார் என்றும், போனி கபூரே தயாரிக்க இருக்கிறார் என்றும் அண்மையில், தகவல் வெளியானது.
 
இந்த நிலையில், இதுவரை விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை படத்திற்காக உடை எடையை கூட்டியிருந்த அஜித், தற்போது உடல் எடையை குறைத்துள்ளார் என்று கூறப்படுகிறது. இது அடுத்த படத்திற்காக எடுத்த முடிவு என்றும் செய்தி வெளியாகி வருகிறது. அந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments