ரமேஷ் பாரதி இயக்கியுள்ள படம் பிஸ்தா. இந்த படத்தில் மெட்ரோ சிரிஷ் நாயகனாக நடிக்கிறார். நாயகிகளாக மிருதுளா முரளி, ஜான்விகா நடிக்கின்றனர். இவர்களுடன், யோகிபாபு, செந்தில், சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். காமெடி கதையில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தரண் குமார் இசையமைத்துள்ளார். இது இவரது 25வது படமாகும்.
தற்போது படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் பிஸ்தா படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்டரில் நாயகன் சிரிஷ் மணமேடையில் இருந்த மணப்பெண்ணை கடத்திச்செல்வது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் இசை விரைவில் வெளியாக உள்ளது.

Comments
Post a Comment