தல!பாலிவுட் பாட்ஷாவாகிறார். அடிச்சு அந்தர் செய்ய அல்டிமேட் கதை ரெடி: கோடம்பாக்கத்தை தெறிக்கவிடும் சூப்பர் எக்ஸ்க்ளூசிவ்!
எம்.ஜி.ஆர். ரஜினிக்குப் பிறகு, தனக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும் இயக்குநர்களோடு அதிக படம் பண்ணும் அடுத்த தலைமுறை மாஸ் ஹீரோ அஜித் தான். சரண், சிவா என்று இதற்கு செம்மத்தியான் உதாரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் தல!யை தாறுமாரு ஸ்டைலிஷாக காட்டு பில்லா, ஆரம்பம்
எனும் அதிரிபுதிரி ஹிட்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அந்த விஷ்ணு இப்போது மீண்டும் தலையோடு இணைகிறார், அது பாலிவுட் படம்! என்பதுதான் ஹாட் ஹைலைட்டே.
எனும் அதிரிபுதிரி ஹிட்களை கொடுத்தவர் விஷ்ணுவர்தன். அந்த விஷ்ணு இப்போது மீண்டும் தலையோடு இணைகிறார், அது பாலிவுட் படம்! என்பதுதான் ஹாட் ஹைலைட்டே.
தல, விஷ்ணு மற்றும் போனிகபூர் தரப்பில் முதல் கட்டப் பேச்சுவார்த்தை முடிந்து, அடுத்த லெவலுக்கு ப்ராஜெக்ட் மூவ் ஆகியிருக்கும் நிலையில் இந்த செய்தி நமது இணையதளத்துக்கு எக்ஸ்க்ளூஸிவ்-வாக கிடைத்துள்ளது.
கிடைத்த தகவல்களை அப்படியே பகிர்கிறோம்....
ஆக்சுவலாக, விஸ்வாசம் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் முடிந்து, ரஷ் போட்டுப்பார்த்த தல முழு திருப்தி. நிச்சயம் மெகா ஹிட்டாகும்’ என்று தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு நம்பிக்கை கொடுத்துவிட்டு, தனது அடுத்த படம் பற்றி யோசிக்க துவங்கினார். அப்போதுதான் ’பிங்க்’ ரீமேக்குக்காக தயாரிப்பாளர் போனிகபூரும், பக்கா மாஸ் திரைக்கதையுடன் இயக்குநர் விஷ்ணுவர்தனும் ஒரே நேரத்தில் அஜித்தை அணுகினர். போனியை முதலில் சந்தித்த தல, ‘நேர்கொண்ட பார்வை’ ப்ராஜெக்ட்டுக்கு ஓ.கே. பண்ணி, இயக்குநர் விநோத்தையும் டிக் செய்தார்.
அதன் பின் விஷ்ணுவிடம் கதை கேட்டவர் மெர்சலாகிப்போனார். அப்போது தல-யிடம் ‘சார், இதை பாலிவுட்ல பண்ணலாமுன்னு தோணுது. உங்களுக்கு நிச்சயமா அங்கே பெரிய கேன்வாஸ் இருக்குது.’ என்றார். உடனே சம்மதிக்கவுமில்லை, மறுக்கவுமில்லை அஜித். மும்பை சினிமா உலகின் முக்கிய புள்ளியான போனிகபூர் இப்போது தன் லைனில் இருப்பதை மனதில் வைத்துவிட்டு, ‘பார்க்கலாம். நீங்க ஸ்க்ரீன்பிளேவை ரொம்ப ஷார்ப்பா ரெடி பண்ணுங்க. உங்க ஆசைக்கு ஏத்த மாதிரி பாலிவுட் லெவல்லேயே பண்ணுங்க. நான் இல்லேன்னாலும் தகுதியான வேற ஹீரோவுக்கு கைகொடுக்கும்.’ என்று அனுப்பிவிட்டார்.
ஆனால் அப்போதே விஷ்ணு முடிவு பண்ணிவிட்டார், நிச்சயம் தல பாலிவுட்டுக்கு ரெடியாகிவிட்டார் என்று. காரணம், அப்படியொரு ஐடியா இல்லை என்றால், உதட்டை பிதுக்கி ‘நோ வே’ன்னு சிம்பிளா முடிச்சிருப்பார். ஆனால் ஸ்க்ரீன்பிளே ரெடி பண்ண சொல்றார்னா, கண்டிப்பா சான்ஸ் இருக்குது என்றபடி சந்தோஷமாக கிளம்பினார். செம்ம ஷார்ப்பாக ஸ்கிரீன்பிளேவும் ரெடி. பக்கா மாஸான ‘கேங்ஸ்டர்’ டைப் கதையாம். பாலிவுட் ப்ரொஃபைலுக்கு ஏற்றபடியான அத்தனை அம்சங்களுமே கதையில் உள்ளனவாம்.
அஜித்தின் நிறமும், ஹைட் அண்டு வெயிட் லுக்கும், எந்த பாலிவுட் மாஸ் ஹீரோவுக்கும் குறைந்ததில்லை என்பதால் விஷ்ணுவுக்கு இந்த ப்ராஜெக்டில் அஜித்தை பண்ணிட வைப்பதில் மிக முழுமையான நம்பிக்கை வந்திருக்கிறது.
எல்லாவற்றையும் ரெடி பண்ணிவிட்டு மீண்டும் தல யிடம் போய் விஷ்ணு நிற்க, கிட்டத்தட்ட ‘நேர்கொண்ட பார்வை’யை ஷூட்டுக்கு பூசணிக்காய் உடைத்திருக்கின்றனர். எனவே இந்த ஸ்க்ரீன்பிளேவை வாங்கிப் பார்த்த அஜித், புன்னகைத்துவிட்டு சில சந்தேகங்களை கேட்டிருக்கிறார்.
பிறகு போனிகபூருக்கு போன் செய்து வரச்சொல்லி விஷ்ணுவை வைத்துக் கொண்டு முதல் கட்ட மீட்டிங் முடிந்திருக்கிறது. கதை, திரைக்கதை எல்லாவற்றையும் ஓ.கே. செய்த போனி, தென்னிந்திய சினிமாவிலிருந்து பாலிவுட்டில் பக்காவாக ஃபிக்ஸ் ஆக இன்றைய தேதிக்கு அஜித்தை விட்டால் ஆளே இல்லை என்று அழுத்திச் சொல்லி, ‘நிச்சயம் செம்ம ஹிட்டாகும்’ என்று தம்ஸ் அப் செய்திருக்கிறார். எல்லோருக்கும் ஹேப்பி.
ஆனால் இதன் பிறகுதான் தல மற்றும் போனி இருவருமே இணைந்து இயக்குநர் விஷ்ணுவர்தனுக்கு ஒரு கண்டிஷன் போட்டுள்ளனர். அதாவது விஷ்ணு மற்ரும் அஜித் இருவருக்குமே பாலிவுட் ப்ராஜெக்ட் புதுசு. எனவே அஜித் போனிகபூர் தயாரிப்பில் அடுத்து ஒரு படத்தை முடித்துவிட்டு இதில் கமிட் ஆவதாகவும், அதற்குள் பாலிவுட்டில் ஒரு ப்ராஜெக்டை முடித்து அந்த ஸ்டைலுக்கு தன்னை விஷ்ணு பொருத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான்.
இதன் தொடர்ச்சியாகவே கார்கில் வீரர் விக்ரம் பத்ராவின் வாழ்க்கை கதையை அடிப்படையாக வைத்து ‘ஷேர்ஷா’ எனும் பெயரில் உருவாகி இருக்கும் கதையை இயக்கும் ப்ராஜெக்டில் கமிட் ஆகியிருக்கிறார் விஷ்ணு. கரண் ஜோகர் தயாரிக்கும் இந்தப் படத்தில், சித்தார்த் மல்ஹோத்ரா நாயகனாகி இருக்கிறார். இந்தப் பட அனுபவம் மூலம் பாலிவுட் சினிமா மேக்கிங்கில் தன்னை ஃபிட் செய்து கொள்ளும் விஷ்ணு, இது முடிந்ததும் தல அஜித்தை பாலிவுட் நாயகனாக்குகிறாராம்.
அந்த கால கட்டத்தின் அரசியல், க்ரைம் மற்றும் டெக்னலஜி சூழ்நிலையை வைத்து இப்போது இருக்கும் கேங்ஸ்டர் கதை அப்டேட் செய்யப்பட்டு தயாராகும் என்கிறார்கள்.
அநேகமாக 2020-ல் தல பாலிவுட் பாட்ஷாவாக மும்பை சினிமா துறைக்குள் கால் வைக்கப்போகிறார்! என்கிறார்கள் அவருக்கு மிக மிக நெருங்கிய வட்டாரத்தில் இருப்போர்.
கான்!களுக்கு கண் கலங்குமோ?
கான்!களுக்கு கண் கலங்குமோ?
Comments
Post a Comment