தமிழ் சினிமாவில் தனது பாடிலாங்குவேஜாலும் காமெடியாலும் முன்னணி காமெடி நடிகர்களின் இடத்தை பிடித்தவர் யோகி பாபு, இவர் முதலில் ஒரு சில படங்களில் மட்டுமே காமெடி நடிகராக நடித்து வந்தார்.
தற்பொழுது தனது அயராத உழைப்பால் முழுநேர காமெடி நடிகராக நடித்து வருகிறார், இவரின் தோற்றம் பலருக்கு பிடித்துவிட்டதால் பல படங்களில் இவரையே காமெடி நடிகராக கமிட் செய்கிறார்கள்.
யோகி பாபு தற்போது தளபதி 63 படத்திலும், தர்பார் படத்தையும் சேர்த்து மொத்தம் 19 படங்கள் தனது கைவசம் வைத்துள்ளார், யோகி பாபு பொதுவாக ஒரு நாள் நடிப்பதற்கு 2 லட்சம் மட்டும் சம்பளமாக வாங்கிக் கொண்டு வந்தார்.
படவாய்ப்பு அதிகமானதால் தனது சம்பளத்தை 3 லட்சம் ஆக உயர்த்தினார் ஒரு நாள் நடிப்பதற்கு மூன்று லட்சம் சம்பளம் வாங்கிய யோகிபாபு தற்பொழுது அதை ஐந்து லட்சமாக உயர்த்தி விட்டார், 5 லட்சம் என்றாலும் பரவாயில்லை யோகிபாபுவின் கால்ஷீட் வேண்டும் என பண பெட்டியுடன் படபிடிப்பில் காத்துக்கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
Comments
Post a Comment