கோமாளி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

ஜெயம் ரவி நடித்துள்ள கோமாளி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்  வெளியாகி ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா நடிப்பில் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கும் படம் ‘கோமாளி‘. வேல்ஸ் இன்டெர்ன்சேஷனல் வழங்கும் இந்த படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

 பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே யோகி பாபு, கே.எஸ் ரவிக்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் கோமாளி. ஐசரி கணேஷ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைக்கிறார். இதில் ஜெயம் ரவி 9 கதாப்பாத்திரங்களில் நடித்து வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இந்நிலையில் கோமாளி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

Comments