அழகிப் பட்டம் பெற்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமை பெற்றவர் சுஷ்மிதா சென். இது நடந்து இருபத்தைந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அவருக்கு தற்போது வயது 43. அழகிப் பட்டம் பெற்ற பின், அவர் பாலிவுட்டில் நடித்து பிரபலமானார். தொடர்ந்து, அவர் பாலிவுட் நடிகையாகவும் இருந்து வருகிறார்.
இவருக்கு உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம் மாடலான ரோமன் ஷாலுடன் காதல் ஏற்பட்டு, இருவரும் காதலர்களாகவே சுற்றி வருகின்றனர். ஆனால், திருமணம் குறித்து பேச்செடுத்தாலே, இருவரும், அதெல்லாம் இப்போதைக்கு இல்லை என நழுவி விடுகின்றனர். இந்நிலையில், இருவரும் லிவிங் டு கெதர் வாழ்க்கை வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், ரெனீ, அலிஷா என்ற இரு பெண்களை தத்தெடுத்து அவர்களோடு வாழ்ந்து வருகிறார் சுஷ்மிதா.
தற்போது, தன்னுடைய காதலன் ரோமன் ஷாலுடன் இணைந்து சுஷ்மிதா, உடல் பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ பதிவு ஒன்றை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் இருவரும் சேர்ந்து உடல் பயிற்சி மேற்கொள்வது பேரின்பத்திலும் பேரின்பம் என குறிப்பிட்டிருக்கிறார் சுஷ்மிதா. இதெல்லாம், இப்போதைக்கு ஏன் வெளியிடப்படுகிறது என புரியாமல் பலரும் குழம்பிப் போய் இருக்கின்றனர்.

Comments
Post a Comment