நடிகை ராஷி கன்னா அயோக்யா படக்குழுவின் சார்பாக மன்னிப்பு கேட்டுள்ளது பலருக்கும் நெகிழ்ச்சியை ஏர்படுத்தியுள்ளது. விஷால், ராஷி கன்னா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார் நடிப்பில் இயக்குனர் வெங்கட்மோகன் இயக்கிய 'அயோக்யா' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
தெலுங்கில் வெளியான டெம்பர் படத்தின் ரீமேக்கான இந்த படம் ஏற்கனவே ஹிந்தியிலும் ரீமேக்காகி அங்கும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ராசி கன்னாவிற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா டப்பிங் செய்திருந்தார்.
ஆனால் அயோக்யா படத்தில் முடிவில் வரும் எண்ட் கார்ட்டில் டப்பிங் பேசியவர்களின் பெயர்கள் இடம்பெறவே இல்லை என டிவிட்டரில் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்த டிவிட்டை கண்ட ராஷி கன்னா அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ராஷி கன்னா பதிவிட்ட டிவிட் இதோ...
Comments
Post a Comment