நெல்சன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் ஜோடியாக நடித்துள்ள ‘மான்ஸ்டர்' படம் விரைவில் திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த படம் குறித்து எஸ்.ஜே.சூர்யா அளித்த பேட்டி ஒன்றில்,எனக்கும் ஒரு எலிக்கும் நடக்கும் போராட்டமே ‘மான்ஸ்டர்'படத்தின் கதை. கிராபிக்ஸ் எலியை பயன்படுத்தாமல்
நிஜ எலியை பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். எனது காதலுக்கு எலி எப்படி வில்லனாகிறது என்பது படம்.என்னுடன் நடிக்க பயந்ததாக பிரியா பவானி சங்கர் சொன்னதை வைத்து என்னுடன் ஜோடி சேர கதாநாயகிகள் தயங்குகிறார்களா? என்று கேட்கின்றனர்.பிரியா பவானி சங்கர் மாணவியாக இருந்தபோது நான் நடித்த நியூ உள்ளிட்ட படங்களை பார்த்து இருப்பார். அந்த எண்ணத்தில் அவர் என்னுடன் நடிப்பது சரியாக இருக்குமா என்று தயங்கி இருக்கலாம்.
எனது முந்தைய படங்களைப்போல் இந்த படம் கவர்ச்சியாக இருக்காது. மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லனாக நடித்தேன். அதுபோன்ற வலுவான கதைகள் வந்தால் வில்லனாக நடிப்பேன்.
எனது முந்தைய படங்களைப்போல் இந்த படம் கவர்ச்சியாக இருக்காது. மெர்சல், ஸ்பைடர் போன்ற படங்களில் வில்லனாக நடித்தேன். அதுபோன்ற வலுவான கதைகள் வந்தால் வில்லனாக நடிப்பேன்.
Comments
Post a Comment