காப்புரிமை விவகாரத்தில் இளையராஜா, எஸ்பி.பாலசுப்ரமணியம் இடையே ஏற்பட்ட மனகசப்பு பெரும் பிரச்னையாய் மாறியது. இனி இளையராஜா பாடல்களை பாட மாட்டேன் என அறிவித்திருந்தார் எஸ்பிபி., மீண்டும் இவர்களது இசையை மேடையில் கேட்க முடியுமா என ரசிகர்கள் ஏங்கினர். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சியில் இளையராஜாவின் பாடல்களை பாடினார் எஸ்.பி.பி.
இந்நிலையில், இளையராஜா - எஸ்.பி.பாலசுப்ரமணியம் இடையேயான கருத்து வேறுபாடு மறைந்து போய்விட்டது. இளையராஜா பிறந்தநாளை முன்னிட்டு, இசை கலைஞர்களுக்கு உதவும் விதமாக வருகிற ஜூன் 2ம் தேதி, சென்னையில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடக்கிறது. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் கலந்து கொண்டு பாடுகிறார். மேலும் கே.ஜே.யேசுதாஸ், பாம்பே ஜெயஸ்ரீ, மனோ, உஷா உதூப் உள்ளிட்ட பலரும் பாடுகின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இசை நிகழ்ச்சிக்கான ஒத்திகை துவங்கி உள்ளது. இதில் எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பங்கேற்றார். அப்போது இளையராஜாவை சந்தித்தபோது தங்களுக்குள் இருந்த பகையை மறைந்து இருவரும் ஆர தழுவி கட்டி மகிழ்ந்தனர். ஒருவருக்கு ஒருவர் வாழ்த்தும், நன்றியும் தெரிவித்து கொண்டனர். இந்த புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. 3 மணிநேரத்திற்கும் அதிகமான ஒத்திகையில் ஈடுபட்ட எஸ்பிபி., இசை நிகழ்ச்சியின் போது சுமார் 15 பாடல்கள் வரை அவர் பாடக்கூடும் என கூறப்படுகிறது.இனி ஒவ்வொரு இன்னிசை மேடைகளிலும் இளைய நிலா பொழிய போகிறது..
இளையராஜா கேட்ட ராயல்டி தொகை நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்தவுடன் பலரும் ஏற்றுக் கொண்டனர் விரைவில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில் இளையராஜா, எஸ் பி பாலசுப்ரமணியம் இணைய உள்ளனர். இவரும் இணைவார்களா என்று ஏங்கிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இருவரும் கட்டிபிடித்து இருக்கும் போட்டோ வெளிவந்துள்ளது. இதனை பார்த்து ரசிகர்கள் சந்தோசப்படுகின்றனர்.
Comments
Post a Comment