செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, சாய் பல்லவி, ரகுல் ப்ரீத் சிங் மற்றும் பலர் நடிக்கும் 'என்ஜிகே' படம், நாளை முதல் உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.அமெரிக்காவில் மட்டும் 150 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகும் இப்படம், தமிழர்கள் இருக்கும் வெளிநாடுகள் பலவற்றிலும் சூர்யாவின் முந்தைய படங்களைவிட அதிகமான தியேட்டர்களில் வெளியாகிறது.
அப்படியிருப்பினும் தமிழ்நாட்டில் எத்தனை தியேட்டர்களில் வெளியாகிறது என்பதை இன்னும் முழுமையாக அறிவிக்கவில்லை. தமிழ்நாட்டின் முக்கிய ஏரியாக்களான மதுரை, சேலம் ஆகிய ஊர்களில் இன்று காலை வரை முன்பதிவு ஆரம்பமாகவில்லை. எந்தெந்த தியேட்டர்களில் படம் வெளியாகிறது எனச் சொல்லுங்கள் எனத் தயாரிப்பு நிறுவனத்தின் டுவிட்டர் கணக்கில் சூர்யாவின் ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள்.
மற்ற ஏரியாக்களில் சென்னையைத் தவிர பல ஊர்களில் அதிகாலை 5 மணி காட்சிக்கும், 8 மணி காட்சிக்கும் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. நாளை படம் வெளியாகும் முதல் நாளுக்கு நல்ல வரவேற்பு இருப்பதாக தியேட்டர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Comments
Post a Comment