சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'என்.ஜி.கே. திரைப்படம் வரும் 31ஆம் தேதி வெளியாகவிருப்பதை அடுத்து இந்த படத்தை புரமோஷன் செய்வதில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.அந்த வகையில் புரமோஷனின் ஒரு பகுதியாக இந்த படத்திற்கு டுவிட்டரில் எமோஜி ஒன்றை படக்குழுவினர் பெற்றுள்ளனர். டுவிட்டரில்
#NGK, #NGKFromMay31, #NGKFire என்று டைப் அடித்தால் உடனே சூர்யாவின் அட்டகாசமான படத்துடன் கூடிய எமோஜி தோன்றும். தமிழ் சினிமாவில் முதல்முறையாக டுவிட்டரில் எமோஜி பெறும் வழக்கத்தை விஜய்யின் 'மெர்சல்' படம் தொடங்கி வைத்தது. அதனையடுத்து தற்போது சூர்யாவின் 'என்.ஜி.கே படத்திற்கும் எமோஜி பெறப்பட்டுள்ளது
சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி, தேவராஜ், உமா பத்மநாபன், இளவரசு, பொன்வண்னன், பாலாசிங், தலைவாசல் விஜய், வேலராமமூர்த்தி, குருசோமசுந்தரம் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவில் பிரவீண் கே.எல் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது
Comments
Post a Comment