இந்த வார ரிலீஸ் களத்தில் ‘மான்ஸ்டர்’

1.மான்ஸ்டர்‘மாயா’, ‘மாநகரம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘பொட்டென்ஷியல் ஸ்டூடியோஸ்’ தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘மான்ஸ்டர்’. ‘ஒரு நாள் கூத்து’ படத்தை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ப்ரியா பவானி சங்கர், கருணாகரன், அனில் குமார் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் எறும்பு, ஈ போன்றவற்றுக்கு கூட தீங்கு நினைக்காத வள்ளலாரின் பக்தராக
எஸ்.ஜே சூர்யா நடிக்கிறார். அப்படிப்பட்டவருக்கு எலியால் தொல்லை வருகிறது. அவர் அதனை எப்படி கையாள்கிறார் என்பதுதான் ‘மான்ஸ்டர்’ படத்தின் கதைக்களம். குழந்தைகள் முதல் பெரியவர்க

2. மிஸ்டர் லோக்கல்

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா, ராதிகா சரத்குமார், ‘யோகி’ பாபு, சதீஷ் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘மிஸ்டர் லோக்கல்’. ‘ஸ்டூடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இந்த படம் எம்.ராஜேஷ் இதற்கு முன் இயக்கிய படங்களைப் போலாவே காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

‘வேலைக்காரன்’ படத்தை தொடந்து சிவகார்த்திகேயனும், நயன்தாராவும் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் நயன்தார, சிவகார்த்திகேயன் கேரடக்ருக்கு இணையான ஒரு கேரக்டரில் படம் முழுக்க வருவது மாதிரி நடித்துள்ளார். அத்துடன் இந்த படத்தில் சிவகார்த்திகேயனின் வேண்டுகோளின்படி டாஸ்மாக், மது அருந்திய பிறகு பாடுவது போன்ற பாடல் காட்சிகளை தவிர்த்துள்ளார் இயக்குனர். ‘ஹிப் பாப் தமிழா’ ஆதி இசை அமைத்திருக்கும் இந்த படத்திற்கு தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளர். சிவகார்த்திகேயன், நயன்தாரா இணைந்து நடித்துள்ள படம் இது என்பதால் இப்படத்தின் மீதும் ஒருவித ஏதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

3. நட்புனா என்னானு தெரியுமா

‘சுட்டகதை’, ‘நளனும் நந்தினியும்’ ஆகிய படங்களை தயாரித்த ‘லிப்ரா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனமும், ‘வனிதா பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நட்புனா என்னானு தெரியுமா’. ஷிவா அரவிந்த் இயக்கியுள்ள இந்த படத்தில் ‘சரவணன் மீனாட்சி’ தொடர் புகழ் கவின் கதாநாயகனாக நடிக்க, ரம்யா நம்பீசன் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘மொட்டை’ ராஜேந்திரன், இளவரசு, அருண்ராஜா காமராஜ், அழகம் பெருமாள் உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு தரன் இசை அமைத்துள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். நிர்மல் படத்தொகுப்பு செய்துள்ளார்.

மூன்று நண்பர்கள் ஒரு பெண்ணை விரும்புகிறார்கள். இம்மூவரில் கதாநாயகன் எவ்வாறு மற்ற நண்பர்களை தாண்டி அந்த பெண்ணை தன் மீது காதல்வயப்பட வைக்கிக்றார் என்பது தானாம் இப்படடத்தின் கதைக்களம்!மேற்கண்ட 3 நேரடித்தமிழ் திரைப்படங்கள் இந்த வார ரிலீசாக இன்று வெளியாகிறது. இதில் என்னென்ன படங்கள் ரசிகர்களின் வரவேற்பு கிடைத்து வெற்றிப் படங்களாக அமையும் என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்!
 
 அனைவரும் குடும்பத்துடன் கண்டு களிக்கும் விதமாக காமெடி குடும்ப குடும்ப சித்திரமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். சாபு ஜோசஃப் படத்தொகுப்பு செய்துள்ளார். இந்த படத்தின் டீஸரும், பாடல்களும் ஏற்கெனவே வெளியாகி ஹிட் அடித்துள்ள நிலையில் இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் இந்த வார ரிலீல களத்தில் முக்கிய படமாக இன்று (17-5-19) வெளியாகிறது ‘மான்ஸ்டர்’.

Comments