‘கனா’ படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனின் தனது ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’. ‘பிளாக் ஷீப் யு-ட்யூப்’ சேனல் புகழ் கார்த்திக் வேணுகோபால் இயக்கி வரும் இந்த படத்தில் விஜய் டிவி பிரபலம் ரியோ ராஜ் கதாநாயகனாக நடிக்க, ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ராதாரவி,
ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோரும் நடித்துள்ளனர். இந்நிலையில் அனைத்து பட வேலைகளும் முடிவடைந்த இப்படம் சென்சாருக்கு சென்றது. சென்சார் குழுவினர் படத்திற்கு ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து இப்படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளர். இது குறித்து ‘சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ்’ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படத்திற்கு சென்சாரில் ‘U’ சர்டிஃபிக்கெட் வழங்கப்பட்டுள்ளது என்றும், இப்படம் ஜூன் 14-ஆம் தேதி வெளியாகும் என்றும் பதிவிட்டுள்ளது.இந்த படத்திற்கு ஷபீர் இசை அமைக்க, யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடித்த மிஸ்டர்.லோக்கல் அவருக்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்தியது. இதற்கு முன்பு இப்படி ஒரு சூழ்நிலை உருவானபோது அவர் தயாரித்த படமான கனா அவரது இமேஜை காப்பாற்றியதோடு, பொருளாதார சிக்கலில் இருந்தும் விடுவித்தது.தற்போது அவர் தயாரித்துள்ள 2வது படமாக நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடுராஜா ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தப் படத்தை இணைய தளத்தில் பிரபலமான பிளாக் சிப் என்ற யூ டியூப் சேனல் டீம் உருவாக்கியுள்ளது.சிவகார்த்திகேயனை கனா படம் காப்பாற்றியதைப்போல நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படமும் காப்பாற்றுமா என்பது ரிலீசுக்கு பிறகு தெரியும்.
Comments
Post a Comment